சென்னை:

மிழகஅரசு ஊழியர்களுக்கு, மாநில அரசு பொங்கல் போனஸ் அறிவித்து, அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு  ஊழியர்களுக்கு பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும்  போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசாணையில்,  ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும்.

சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும்.

‘சி’ மற்றும் ‘டி’ பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]