சென்னை: தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு 7 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தேசியக் கல்விக் கொள்கை இறுதி வடிவம் பெற்றுள்ளது. பல்வேறு அம்சங்களுடன் உள்ள தேசிய கல்விக்கொள்கை குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தேசிய கல்விக்கொள்கையில் பின்பற்ற வேண்டியவை பற்றி இக்குழு  ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்.