நாகப்பட்டினம்
இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கிய சம்பவ்ம கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அக்கரைபேட்டையை சேர்ந்த விஜயகுமார் சொந்தமாக பைபர் படகு வைத்திருந்தார். இவரது படகு மூலம் அக்கரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகியோர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அங்கு இரண்டு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் படகை வழிமறித்தது கத்தி மற்றும் கட்டையால் மீனவர்களை தாக்கி மீனவரின் படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட ரூ 3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் ராஜேந்திரன் என்பவருக்கு தலையில் வெட்டுகாயமும், ராஜ்குமார் என்பவருக்கு தலையில் வெட்டுக்காயம் மற்றும் கையில் காயமும் ஏற்பட்டது. நாகலிங்கம் என்பவருக்கு உள்காயம் ஏற்பட்டது. காயங்களுடன் கடற்கரை பகுதிக்கு திரும்பிய மீனவர்களை அவர்களின் உறவினர்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிகத்தனர்.
அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன் மற்றும் மீன்பிடி உபகரண பொருட்களை பறித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.