சென்னை

மிழகத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட காலக்கெடுவை அரசு நீட்டித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.  இரண்டாம் கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.  தற்போது பொதுவாக கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்டு வருகிறது.

மத்திய அரசு கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடும் காலக்கெடுவை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்கக் கோரி மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதி உள்ளது.   தற்போது 28 நாட்களில் இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.   மத்திய அரசின் பரிந்துரையைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தமிழக சுகாதாரச் செயலர் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் புதிய பரிந்துரையைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.  அதன்படி கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடும் காலக்கெடுவை நான்கு வாரங்களுக்குப் பதிலாக 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.    சாதாரணமாக இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 4 முதல் 8 வாரம் வரை எப்போதும் போட்டுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.