தராபாத்

ந்திர முன்னாள் முதல்வரும் தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசையா இன்று காலமானார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆந்திர முதல்வராகப் பதவியில் இருந்த ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததை அடுத்து ரோசையா அம்மாநில முதல்வராக பதவி ஏற்றார்.   அவர் 2010 ஆம் வருடம் நவம்பர் 24 வரை பதவியில் இருந்தார்.  காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் அவர் ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசு அவரை தமிழக ஆளுநராக நியமித்தது.   பிறகு 2011ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததால் ரோசையா மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் அவர் தனது பதவிக்காலம் முழுவதும் ஆளுநராகப் பணி  புரிந்து ஓய்வு பெற்றார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது பதவிக்காலம் முடிந்த பிறகு தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவி ஏற்றார்.

அதன் பிறகு ரோசையா தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார்.   சுமார் 88 வயதாகும் அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி ரோசையா உயிர் இழந்தார்.   பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.