சென்னை:  தமிழ்நாட்டில்,  இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. இந்த முதல் சுற்று கலந்தாய்வில் 39, 145 பேர் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.   இதற்காக விண்ணபித்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில்,  10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் ஜுன் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்  ஜூன் 27ந்தேதி  வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  பொறியியல் கலந்தாய்வு  ஜூலை  7ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு 26ந்தேதி வரை நடைபெற உள்ளது.

ஏற்கவே 7ந்தேதி முதல் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் (ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19) பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து,   துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் ஆக. 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று பொதுப்பிரிவிருக்கா கலந்தாய்வு தொடங்கி உள்ளது. இந்த முதல்சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ மாணவிகள்,  ஜூலை 16க்குள் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கல்லூரிகளை தேர்வு செய்தை தொடர்ந்து அவர்களுக்கு ஜூலை 17ல் தற்காலிக ஒதுக்கீடு ஆணை தரப்பட்டு, ஜூலை 18ல் மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும். இறுதி ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் ஜூலை 23ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எ அறிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 20ல் நிறைவு பெறுகிறது.