சென்னை

மிழக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்துக்கான பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொதுக் கல்வியில் பொதுப் பிரிவில் 1,10,873 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அதைத் தவிர மாற்றுத் திறனாளிகள் 148 பேரும் முன்னாள் ராணுவத்தினர் 853 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 2,682 பேர் பொறியியல் கல்வியில் சேர தகுதி இழந்துள்ளனர்.

தொழில்நுட்ப கல்வி பொதுப் பிரிவில் 1,553 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   மேலும் இதில் மாற்றுத் திறனாளிகள் ஒருவரும் முன்னாள் ராணுவத்தினர் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விளையாட்டு ஒதுக்கீட்டில் 1,409 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.