சென்னை: 3 மாதங்களில் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறி உள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், இரட்டை பெயர் பதிவுகள் நீக்கம், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசியதாவது: 3 மாதங்களில் மட்டும் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் 4 நாள் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அதிக அளவில் ஆர்வம் காட்டுவதாக அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன என்றார்.