பரிமலை

மிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இருமுடி தாங்கிச் சென்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மகரஜோதி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.  கடந்த 15 ஆம் தேதி மகர விளக்கு தெரிந்தது.  இதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து பரவசம் அடைந்தனர்.

 

இந்நிலையில் சபரிமலைக் கோவிலுக்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்று தரிசனம் செய்துள்ளார்.  அவர் இருமுடி ஏந்தி தரிசனம் செய்த காட்சிகள் இணைய தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.