சென்னை:

ஸ்லாமியர் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வந்த பாஜக பிரமுகரான கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்.

பாஜக பிரமுகரான கல்யாணராமன், ஏற்கனவே ஆண்டாள் விவகாரத்தில் அநாகரிகமாக பேசியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதுதொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் சமீப காலமாக இஸ்லாமிய மதம் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்தும் சர்ச்சைக் குரிய வகையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்தததை தொடர்ந்து தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் கல்யாண ராமனின் பதிவுகளை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில்,   இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்த நினைப்பதாக கூறி,  பாஜக பிரமுகர் கல்யாணராமனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாமியர் குறித்து சமூகவலைதளத்தில் தவறான பதிவு: பாஜக கல்யாணராமன் கைது