சென்னை: தமிழகத்தில் இன்று 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் புதிதாக 5,595 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, கொரோனா நோயாளகளின் எண்ணிக்கை 6,08,885 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 67 பேர் கொரோனாவால் பலியாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 9,653 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,603 பேர் டிஸ்சார்ஜ் ஆக, ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 5.52,938 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,294 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், சென்னையில் இன்று ஒருநாளில் 1,278 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறி உள்ளது.