சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், 119 பேர் பலியாகி உள்ளதாகவும் தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:  தமிழகத்தில் புதிதாக மேலும் 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 5,974 பேர் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 20 பேர் உட்பட 5,994 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 119 பேர் பலியாகி உள்ளனர்.  அரசு மருத்துவமனைகளில் 85 பேர், தனியார் மருத்துவமனைகளில் 34 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்தனர். வேறுநோய் பாதிப்பு இல்லாத 16 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,927 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,09,117 ஆக உயர்ந்துள்ளது.

ஜூன் 3ம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது, சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 2,302 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 6,020 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,32,618 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 68,170 பேருக்கும், இதுவரை 31,09,708 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 53,336 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,90,9074லிருந்து 2,96,901 ஆக உயர்ந்துள்ளது. இன்று 68,179 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.