பாஜக அதிமுக கூட்டணி அமையாது: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆரூடம்

Must read

சென்னை:

மிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் 8ந்தேதி அவர் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பதவி ஏற்கிறார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்பட பலரை  சந்தித்து ஆசி பெற்ற அழகிரி தற்போது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இன்று காலை  அணண் அறிவாலயம் வந்த அழகிரி, அங்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

சந்திப்பு முடிந்த வெளியே வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டாலினை சந்தித்தது  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்தார்.

‘மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் எடப்பாடி அரசும் தங்களுடைய தவறான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக கொள்கைகளினால் மக்களுடைய 100 சதவிகித வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே, அந்த சூழலில் மக்களுடைய எண்ணத்தை வாக்குகளாக மாற்ற எங்களுடைய கூட்டணி கடுமையாக உழைத்து வருகிறது.

எங்களால் வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும்.

ராகுல் காந்தி தலைமையில் அடுத்து ஆட்சி அமையும். இது சம்பந்தமாக திமுக தலைவர் ஸ்டாலினோடு கலந்தாலோசித்தோம். மக்களுடைய ஆதரவு எங்கள் கூட்டணிக்கு இருக்கிறது என்பது மகிழ்ச்சிகரமான விஷயம். இந்த சந்திப்பு நன்றகா நடந்தது.  திமுக காங்கிரஸ் கூட்டணியில் வேறு சில கட்சிகளும் வர விரும்புகின்றன என்றும் தெரிவித்தார்.

ஆனால், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் கூட்டணி பங்கீடு குறித்து திமுக காங்கிரஸ் தலைவர்கள் முடிவெடுப்பார்கள்”. யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திமுக.,விற்கு தெரியும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும்  என்றும் கூறினார்.

அதிமுக பாஜக கூட்டணி என்று தகவல்கள் பரவி வருகிறதே என்ற கேள்விக்கு பா.ஜ., அதிமுக கூட்டணி அமையாது என்றும், அப்படி அமைந்தாலும் தாமரை மேலே எழும்பாது, மத்திய அரசை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இவ்வாறு அழகிரி கூறினார்.

More articles

Latest article