டில்லி

ரு தொண்டு அமைப்பு இந்தியாவின் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.

புகழ் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமன “பிளான் இந்தியா”  பெண்களின் பாதுகாப்பு இந்தியாவில் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு எடுத்து முடிவு அறிவித்துள்ளது.   இந்தக் கணக்கெடுப்பில் கல்வி, வறுமை, சுகாதாரம், பாலியல் கொடுமைகளுக்கு எதிரான பாதுகாப்பு ஆகிய அடிப்படையில் கேள்விகள் எழுப்பப் பட்டு அதற்கான பதில்களைப் பெற்றுள்ளது.   அந்த பதில்களைக் கொண்டு ஒரு அறிக்கையை அரசுக்கு இந்த நிறுவனம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையை மத்திய அரசின் பெண்கள் குழந்தைகள் முன்னேற்றத் துறை அமைச்சகம் பத்தீரிகையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :

இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள மாநிலம் கோவா ஆகும்.   இந்தியாவிலேயே சிறிய மாநிலமான கோவாவுக்கு 0.656 புள்ளிகள் கிடைத்துள்ளது

இரண்டாவது இடத்தை கேரளாவும், மூன்றாவது நான்காவது இடங்களை மிசோரம், சிக்கிம், மணிலா ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன.

அதன் பின் இமாசலப் பிரதேசம் (6),  கர்நாடகம் (7), பஞ்சாப்(8), மகாராஷ்டிரா (9), உத்தர் காண்ட் (10) ஆகிய இடங்களில் உள்ளன

தமிழ்நாட்டுக்கு கிடைத்த இடம் 11 ஆகும்.   தமிழ்நாட்டுக்கு கிடைத்த புள்ளிகள் 0.57324 ஆகும்.   தமிழ்நாட்டில் 15.7% பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடந்து விடுகிறது.   பாலியல் வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு என்னும் அம்சத்தில் 12ஆம் இடமும், கல்வியில் 22 ஆவது இடமும் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.

டில்லிக்கு 28ஆவது இடம் கிடைத்துள்ளது.    கடைசி இடம் பீகார் மாநிலத்துக்கு கிடைத்துள்ளது.

பெண்களுக்கு, அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் நடை பெறும் போது, 99.6% குழந்தைகளுக்கு அதை செய்பவர் நெருங்கிய உறவினராகவோ அல்லது நெருங்கிய உறவினராகவோ இருக்கின்றனர்.