சென்னை
பிரதமர் மோடி ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட வருவதை ஒட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.
ஓகிப் புயல் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளா மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு அவர்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்தது. இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வருகிறார்.
பிரதமர் மோடி நிவாரணப் பணிகளைப் பார்வையிடுவதோடு, பொதுமக்கள் பிரதிநிதிகளையும், மீனவர்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார். பிரதமரின் வருகைய ஒட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.