டில்லி

ரும் 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டில்லி சென்று பதவி ஏற்ற பின் முதல் முறையாகப் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.  திமுக தலைவர் முக  ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்றார்.  அப்போது முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் அவர் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கினார்.  தற்போது கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.

ஸ்டாலின் பதவி ஏற்றதும் அவர் பிரதமரைச் சந்திப்பாரா என்னும் செய்தியாளர்கள் கேள்விக்கு, ”தற்போது கரோனா தொற்று அதிகம் இருக்கிற காரணத்தால் எங்கள் முதல் பணி கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமே. தொற்றுப் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டபின் கண்டிப்பாக டெல்லி செல்வேன். பிரதமரைச் சந்தித்து தமிழகத்துக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறுவேன்” என்று பதில் அளித்தார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும்  21 ஆம் தேதி தொடங்க உள்ளதால் பிரதமரைச் சந்திக்க முதல்வர் முடிவு செய்தார்.   வரும் 16 ஆம் தேதி அன்று விமானம் மூலம் டில்லி செல்லும் மு க ஸ்டாலின் 17 ஆம் தேதி காலை பிரதமரைச் சந்திக்க உள்ளார்.  அதன் பிறகு அவர் டில்லியில் கட்டப்பட்டு வரும் அறிவாலயப் பணிகளை பார்வை இடுகிறார்.  அன்று மாலை சென்னை திரும்ப உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பிரதமரைச் சந்திக்கும் போது தமிழகத்துக்கான கோரிக்கைகளை வைக்க உள்ளார்.    மேலும் செங்கல்பட்டு தடுப்பூசி மையம் விவகாரம்கருப்புப்  பூஞ்சைக்கான கூடுதல் மருந்துகள் ஒதுக்கீடுதமிழகத்துக்கான ஜிஎஸ்டி தொகைநீட் மருத்துவ நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து அப்போது பிரதமரிடம் பேச உள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.