சென்னை

ந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா பராமரிப்பு மையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி சென்னையில் பல இடங்களில் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.  அவ்வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா பராமரிப்பு மையம் ஒன்றை அமைத்து வருகிறது.

இன்று இந்த மையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார்.  இ\ங்கு முதல்கட்டமாக 300 படுக்கைகளும் அடுத்த கட்டமாக 500 படுக்கைகளுமாக மொத்தம் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இதற்காக 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட 300 படுக்கைகள் வரும் 10 ஆம் தேதி முதல் செயல்பட உள்ளன.  இங்குப் பணி புரிய ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களும் செவிலியர்களும் அமர்த்தப்பட உள்ளனர்.  இங்கு உணவு மற்றும் பராமரிப்பு பணிகளை சென்னை மாநகரட்சி மேற்கொள்ள உள்ளது.

முதல்வருடன் இந்த மையத்தை அமைச்சர்கள் கே என் நேரு, தா மோ அன்பரசன், வணிக வரித்துறை ஆணையர், முதன்மைச் செயலர், சென்னை மாநகராட்சி கொரோனா கண்காணிப்பு அலுவலர், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் பார்வை இட்டனர்.