சென்னை

ன்று பட்டினப்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   கொரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.   அதன்படி கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு 9 மாதங்கள் அல்லது 19 வாரங்கள் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்டோர், மற்றும் இணை நோய் உள்ளோர்  இதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.

தமிழகத்தில் இன்று தடுப்பூசி போடும் பணியைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பட்டினப்பாக்கத்தில் தொடங்கி வைத்தார்.   முதல் இரு டோஸ்களில் எந்த வகை தடுப்பூசி போடப்பட்டதோ அதே வகை தடுப்பூசியே 3 ஆம் டோஸாக தடுப்பூசி செலுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.