சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை  நடத்துகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, திரையரங்குகள், போக்குவரத்து, வணிக வளாகங்களில் 50 சதவீத மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் இரவு 10 மணிமுறை காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகளை அளிக்கலாமா அல்லது கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.\

இந்த வாரம் பொங்கல் மற்றும் அதனை சார்ந்த பண்டிகைகள் தொடர்ச்சியாக வரவுள்ளன. தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நடக்க இருக்கின்றன. இந்த சூழலில் அடுக்கக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்று  காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில்  ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதில்,  மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினரின் ஆலோசனையை ஏற்று முதலமைச்சார் நாளையே புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.