சென்னை: பிரதமர் நேற்று தொடங்கி வைத்த தூய்மை இந்தியா, அம்ருத் திட்டங்ளை வரவேற்பதாக தமிர்நாடு  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

“கொரோனா தொற்றில் இருந்து தமிழ்நாடு மீண்டு வருகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன் தூய்மை இந்தியா, அம்ருத் திட்டங்களின் 2ஆம் கட்ட பணிகளை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைப்பதை வரவேற்கிறேன்” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடியால்,  கடந்த 2014-ம் ஆண்டு ‘தூய்மை இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது. அதன்  2-ம் கட்டம் திட்டம் நேற்று (அக்டோபர் 1ந்தேதி) டெல்லியில்பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று  உரையாற்றினார். அப்போது,

கொரோனா தொற்றை வென்று அனைத்து மாநிலங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ருத் ஆகிய திட்டங்களின் 2-ம்கட்ட பணிகளை நான் வரவேற்கிறேன். நம் நாட்டில் நகரமயமாக்கல் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இதுபோன்ற திட்டங்கள் தேவையான ஒன்று. இந்தியாவில் அதிக நகரமயமாக மாறிய மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. நகர்ப்புற மேம்பாட்டில் முன்னோடியாக விளங்கும் தமிழகம், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை பெருமளவு மேம்படுத்தி உள்ளது. கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் புதுமையான திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வரும் 2031-ம் ஆண்டைஎண்ணத்தில் வைத்து தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத சூழல், குப்பைகள் அற்ற நகரம், திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை திட்டம், கலைஞர்மேம்பாட்டு திட்டம், சிங்கார சென்னை 2-ம் கட்டம் என பல்வேறு பணிகளை தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. இப்போது பிரதமர் தொடங்கி வைத்துள்ள திட்டங்களை எங்கள் மாநில அரசின் மேம்பாட்டு திட்டங்களுடன் இணைத்து மக்கள் வாழ, நாட்டின் நகர்புற வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக விளங்கும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

 

தூய்மை இந்தியா 2.0 திட்டம், அம்ருத் 2.0 திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது,  திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க கடந்த 2014-ல் இருந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலம் குப்பைகள் இல்லாத நகரங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அம்ருத் 2.0 திட்டத்தின் மூலம் அனைத்து நகரங்களிலும் கழிவுநீர் வசதி மேம்படுத்தப்படும்.சுத்தமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.

இந்த திட்டங்களின் வெற்றியை தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு சமர்ப்பிக்கிறேன். சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை களைய பாடுபட்ட அம்பேத்கர் வழியில் மத்திய அரசு நடக்கிறது. வளமான எதிர்காலத்தை தேடி கிராமங் களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் நகரங்களில் குடியேறுகின்றனர். அவர்களின் நகர வாழ்க்கை கடினமானதாக உள்ளது. அம்பேத் கர் வழிகாட்டுதலின்படி அவர்கள் வாழ்க்கை நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படு கிறது.

இன்றைய இளம் தலைமுறை யினர் தூய்மை இந்தியா திட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங் கேற்றுள்ளனர். சிறு குழந்தை கள் கூட சாக்லேட் சாப்பிட்டுவிட்டு தாள்களை குப்பைத் தொட்டியில் போடுகின்றனர்.

நாடு முழுவதும் ஒரு நாளில் ஒரு லட்சம் டன் குப்பை சேகரமாகிறது. இதில் 70 சதவீத குப்பைகள் சேகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படுகிறது. இதனை 100 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

டெல்லியில் நீண்டகாலமாக ஒரு குப்பை மலை உள்ளது. தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் அந்த குப்பை மலை விரைவில் அகற்றப்படும். இதேபோல நாடு முழுவதும் நகரங்களில் உருவாகியுள்ள குப்பை மலைகள் காணாமல் போகும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அம்ருத் 2.0 திட்டத்தில் 4,700 நகர்ப்புற உள்ளாட்சிகளில் 100 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் கழிவுநீர் மேலாண்மையை உறுதி செய்வது, திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்காத நிலையை உருவாக்குவதுதொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.