சென்னை:
முழு உடல் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீ ர் செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இன்று காலை துணைமுதல்வர் ஓபிஎஸ் திடீரென சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனைகளில் ஒன்றான எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பரபரபப்பை ஏற்படுத்தியது.
ஆனால், ஓபிஎஸ் முழு உடல் பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில்,  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி.