டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருமாறு குடியரசு தலைவருக்கு அழைப்பிதழை வழங்கினார்.

முன்னதாக இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி சென்ற தமிழக முதல்வருக்கு திமுக மூத்த தலைவர்கள் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்குச் சென்ற அவர் பின்னர் ராஷ்ட்ரபதி பவன் சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து அழைப்பிதழ் வழங்கியதோடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]