2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாக துவங்கியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நடக்க உள்ள ஆலோசனையில் அவர் பங்கேற்க உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கும் நிலையில் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக அந்த கூட்டணியில் அதிக இடங்களை கைப்பற்றும் மூன்றாவது பெரிய கட்சி.
திமுக போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.