சென்னை

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு  விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நாளை நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை  வாங்கி ஒபூஜை செய்வது வழக்கமாகும். அப்போது விநாயகருக்கு, கொழுக்கட்டை, வடை, பாயசம், பழங்களைப் படைத்து வழிபடுவார்கள்.

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் முதல்வர், “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துகள். விநாயக பெருமானின் அவதார நாளில் வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும், நாடெங்கும் நலமும் வளமும்  பெருகட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.