இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கிட் வருகிறது! தமிழக முதல்வர் தகவல்..

Must read

சென்னை:

ன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கருவிகள் வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு வழங்கியுள்ள  20ஆயிரம் சோதனை கருவிகளும் விரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கொரோனா தாக்கத்தைத் பொறுத்தே ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தமிழகத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர்கூறியதாவது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 738 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா  சோதனை நடைபெற்றதாகவும், 19 ஆய்வகங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 6,095 பேருக்கு இதுவரை சோதனை நடைபெற்றுள்ளது. 344 பேரின் முடிவுகள் வரவேண்டியுள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வாங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருப்பதாக வும்,   இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வர இருப்பதாக தெரிவித்தவர்,  மத்திய அரசு அறிவித்துள்ள 20ஆயிரம் கொரோனா டெஸ்ட் கிட்கள் ஓரிரு நாளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

முக கவசம், கொரோனா தடுப்பு மாத்திரைகள், கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள்  போதிய அளவுக்கு தமிழகத்தில் கையிருப்பு உள்ளதாக தெரிவித்த முதல்வர், கொரோனா நோயாளிகளுக்காக 32,371 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள்,  3371 வெண்டிலேட்டர்கள்  உள்பட 14,525 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 2500 வெண்டிலேட்டர்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில்,  திருமண மண்டபங்களில் 73,863 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும், சுமார் 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது, அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையிலேயே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பலர் அதை மீறி வருகின்றனர். ஊரட்ங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அண்டை மாநிலங்களில் இருந்து மளிகைப் பொருள்கள் கூட்டுறவுத்துறை மூலம் வாங்கப்படும் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த முதல்வர், . கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல்,  2-ம் நிலையில் உள்ள கொரோனா 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும், மருத்துவர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவின் கருத்துக்களை அரசாங்கம் பெற்று வருவதாகவும் முதல்வர்  கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களுக்கு சிகிச்சையளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

கொரோனா தடுப்பு பணியின் போது மாரடைப்பால் மரணமடைந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

More articles

Latest article