சென்னை:
னியார் நிறுவனங்களில் வேலை தேடும் இளைஞர்களுக்காக Tamil Nadu Private Job portal என்ற இணையதளத்தை தமிழக  முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்துள்ள இளைஞர்களுக்காகவும், புதியதாக வேலை தேடுபவர்களுக்காகவும், தனியார் நிறுவனங்களில்  தகுந்த வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரும் பொருட்டு இணைய தளம் உருவாக்கப்பட்டுஉள்ளது. அந்த இணையதளத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இந்த இணைய தளத்தில்,  தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் குறித்து அப்டேட் செய்யும். அதே போன்று இளைஞர்கள் தங்களின் பயோடேட்டாவை அப்டேட் செய்து கொள்ளலாம். . தகுதியான நபர்களை தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்து கொள்ளும் வகையில் இந்த இணைய தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் வேலை தேடுவோர்  பதிவு செய்யலாம்.
“தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்” என்று பெயரிடப்பட்ட ‘Tamil Nadu Private Job portal’ (www.tnprivatejobs.tn.gov.in) இணையத்தளத்திற்கு சென்று, வேலை தேடுவோர் நேரடியாக தங்களது பயோ டேட்டாவை  பதிவு செய்து கொள்ளலாம்.
தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங் களில் இருக்கும் காலிப் பணியிடங்கள் குறித்தும் அந்த இணையத்தில் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த சேவைகளுக்கு எந்தவதி  கட்டணமும் கிடையாது.
இந்ததொடக்க விழா நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோஃபர் கபீல், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்