சென்னை:
ரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று முதல்வர் தலைமை செயலகத்தில் வைத்து ஆலோசனை நடத்த உள்ளார்.

பள்ளிகள் திறப்பு அறிவிப்பு வருமா? கூடுதல் தளர்வுகள் என்ன? என்பது குறிதத அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை அரசு வெளியிடும்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறை இருந்து வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக கடைகள், மால்கள், தியேட்டர்கள், பொது போக்குவரத்து, பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் என அனைத்திற்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி தலைமை செயலகத்தில் இருந்தபடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று முதல்வர் தலைமை செயலகத்தில் வைத்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்பட உள்ளது. ஊரடங்கு நீடிக்கப்படுமா? பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வருமா? கூடுதல் தளர்வுகள் என்ன? என்பது குறிதத அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.