சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

நாளை பிற்பகலில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்லும் முதலமைச்ச எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் திங்கள்கிழமை இரவு தங்குகிறார். செவ்வாய்கிழமை பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்களைச் சந்திக்கிறார்.
சந்திப்பின்போது நிவா், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு நிவாரண நிதியை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளார். மேலும், துறை வாரியாக தேவைப்படும் உதவிகளுக்கான கோரிக்கை மனுக்களையும் அவா் சமா்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடம் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை பிரதமா் மோடி திறந்து வைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்காகவும் பிரதமரை நேரில் சந்தித்து முதலமைச்ச எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
[youtube-feed feed=1]