தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Must read

சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது: தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 20ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை 2 நாள்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். வடகிழக்கு பருவ மழையானது வரும் 19ம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article