சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
கடந்த 13ம் தேதி முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் சென்றுகொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு விழுப்புரம் அருகே உடல் நிலை பாதிக்கப்பட்டது.
உடனடியாக, விழுப்புரத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட, பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது எக்மோ கருவி மூலம் துரைகண்ணுக்கு சிகிச்சை தரப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந் நிலையில், சிகிச்சை பெற்று வரும் துரைக்கண்ணு உடல்நிலை குறித்து விசாரிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனை சென்றார்.
எக்மோ உதவியுடன் சிகிச்சை பெறும் அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். அவருடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மருத்துவமனை சென்றனர்.