சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ்க முதல்வர் மு க ஸ்டாலின்,

”பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை சென்னையில் பேரணி நடத்தப்படும். நாளை மாலை 5 மணிக்கு சென்னையில் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கும்.

வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம். முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பார்கள்

என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.