சென்னை
தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்து எவ்வித புகார்களும் இல்லாமல் வழங்க முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக அரசு சார்பில் 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற முறையை விட இம்முறை பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் கரும்பு துண்டுக்குப் பதில் முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.
ஆயினும் ஒரு சிலர் தங்களுக்கு அனைத்துப் பொருட்களும் கிடைக்கவில்லை எனினும் பொருட்கள் தரமாக இல்லை எனவும் புகார்கள் தெரிவித்துள்ளனர். அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்களுக்கு ஜனவரி 31 வரை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டரில்,
“அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை மக்கள் மகிழ்ச்சியோடு பெற்று வந்தாலும், சிலர் இதில் திட்டமிட்டுத் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். எனவே எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி, பொருட்கள் வழங்கப்படுவதை மக்கள் பிரதிநிதிகளும் அலுவலர்களும் கண்காணித்து உறுதிசெய்ய அறிவுறுத்தியுள்ளேன்.”
எனப் பதிந்துள்ளார்.