சென்னை

திமுக தலைவர் முக ஸ்டாலினை தமிழக தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் திமுக பல இடங்களில் முன்னிலையில் உள்ளது.  ஒரு சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது.  திமுக அடுத்ததாக ஆட்சி அமைக்கப் போவது உறுதி ஆகி உள்ளது.

இதையொட்டி மு க ஸ்டாலினுக்கு பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  மேலும் தமிழக அரசின் பல உயர் அதிகாரிகளும் நேரில் சந்தித்து மு க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் தமிழக அரசு தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் முக ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.  அப்போது திமுக வெற்றி பெற்றதையொட்டி முக ஸ்டாலினுக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.