சென்னை

நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமான ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமாகும். இதை ரமலான் என்றும் ரம்ஜான் என்றும் அழைக்கின்றனர். முஸ்லிம்களின் புனித நூலான குரான் இந்த மாதத்தில்தான், அருளப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும். இந்த மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்று தமிழகத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்

தமிழக அரசின் தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்தில் ரமலான் மாத பிறை தேட வேண்டிய நாளான 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் கீழக்கரை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது. ந

பி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் ரமலான் மாதம் நிறைவுபெற்று 30/03/2025 ஞாயிற்றுக்கிழமை மக்ரிபிலிருந்து ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பானது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

ஷவ்வால் பிறை 31/03/2025 (திங்கள் கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தினமாகும்”

என்று தெரிவித்துள்ளார்.

ஒரு சில அரபு நாடுகளில் நேற்றே ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.