தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு அவரிடம் கனிமவளத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் சட்டத்துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.