சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கும், 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதையொட்டி, வணிகர் சங்கங்கள், தொழில் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கருத்துக்களை கேட்டு வருகிறார். மேலும், துறை வாரியாக அமைச்சர்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தினர். அதுபோல வேளாண் பட்ஜெட்டுக்காகவும் விவசாயிகள், உள்பட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்து.
இதையடுத்து, பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில், இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ந சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு டைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்க உள்ளனர்.குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.