தூத்துக்குடி
தமிழக பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சமூக இடைவெளி கேள்விக்குறி ஆகி உள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் மூன்றாம் கட்டம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
இன்று முதல் தொடங்கப்படும் நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டடுள்ளது.
இந்த பேருந்துகளில் சமூக இடைவெளி அவசியம் என வலியுறுத்தபட்டுளது.
ஒரு வரிசையில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும் என கூறபட்டுள்ள்து.

இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வந்துள்ள புகைப்படங்கள் உள்ளே சமூக இடைவெளி உள்ளதைக் காட்டுகின்றன.
ஆனால் வெளியே ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு பேருந்துகளில் ஏறும் படங்களும் வெளியாகி உள்ளன.
இதனால் சமூக இடைவெளி கேள்விக்குறி ஆகி உள்ளதாக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel