சென்னை
தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகல் பம்பை வரை செல்ல அனும்மதி அளிக்கப்பட்டுள்ளது.
வருகிற 15 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக திறக்கப்பட்டு அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். இந்த சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது.
இதையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதி, சாலை மேம்பாடு, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகள் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது., மண்டல பூஜை முதல் மகர ஜோதி வரை தமிழக பஸ்கள் பம்பை வரை இயக்கப்படும் என்று தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பெருந்து நிறுத்துமிட பிரச்சினை எழாத வகையில், 2 தமிழக பஸ்களை அங்கே நிறுத்தி வைக்க கேரள போக்குவரத்துத்துறை தேவஸ்தானத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக எஸ்.இ.டி.சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பம்பையில் இருந்து தமிழக பஸ்கள் புறப்படுவதன் மூலம் பக்தர்களுக்கு பயண அசதி குறையும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்ற ஆண்டு வரை தமிழக அரசுப் பஸ்கள் நிலக்கல்லில் இருந்து மட்டுமே புறப்பட கேரள அரசு அனுமதித்திருந்தது. தற்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று எஸ்.இ.டி.சி பஸ்கள் பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்ற கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதியால் தமிழக பக்தர்கள் 20 கி.மீ வரை கேரள பஸ்களில் அலைய வேண்டிய அவசியம் இனி இருக்காது.