சென்னை:
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வரும் 14ந்தேதியுடன் முடிவடை யும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்து உள்ளார்.
2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதிஅமைச்சரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து வரும் 14-ம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்ப தாக சபாநாயகர் தெரிவித்து உள்ளார்.
இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடைந்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்த நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்றார்.
அதைத்தெடர்ந்து வரும் 11-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 13-ம் தேதி (புதன் கிழமை) வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும், பட்ஜெட் விவாதத்திற்கு வரும் 14ந்தேதி (வியாழக்கிழமை) துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துப் பேசுவார் என்றும், அத்துடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெறும் என்றும் அறிவித்துள்ளார்.
இன்று வெறும் பட்ஜெட் உரையுடன் சபை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை முதல் 3 நாட்கள் மட்டுமே விவாதங்கள் நடைபெற உள்ளது. இறுதி நாளில் ஒபிஎஸ் பதிலுடன் கூட்டத் தொடர் நிறைவு பெற்று விடும்.
ஒரு வருடத்திற்கான வரவு செலவு குறித்து விவாதிக்க வெறும் 3 நாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இது போதுமானதா? இதுகுறித்து எதிர்கட்சிகள் ஏன் மவுனம் காக்கின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.