சென்னை,

மிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 16ந்தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டு உள்ளார்.

அன்றைய தினம் தமிழக அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 18ந்தேதி தமிழக சட்டப்பேரவையின் அவசர கூட்டம் கூட்டப்பட்டது. அன்று எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட அமளி காரணமாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டார். பின்னர் எதிர்க்கட்சியினர் இன்றி ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடி வெற்றிப்பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து இந்த மாதம் மார்ச் 16ந்தேதி சட்டப்பேரவை கூடும் என்றும் சபாநாயகர் தனபால் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக சட்டமன்றம் மார்ச் 16ந்தேதி கூடுகிறது என்றும் அன்று தேதி காலை பத்தரை மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு மார்ச் 23ம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக எடப்பாடி பதவியேற்றபின் நடைபெறும் முதல் பட்ஜெட் என்றும், அதுபோல தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.