சென்னை: நிதியமைச்சர் தாக்கல் செய்துவரும் பட்ஜெட்டில்  கோவையில் செம்மொழி பூங்கா, ஈரோட்டில் வனவிலங்கு சரணாலயம், அடையாறு கரையோரம் பொழுதுபோக்கு பூங்கா, கடல் அரிப்பை தடுங்கக நெய்தல்பூங்கா,  மதுரை கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்,  மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்க கடன் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

ரூ. 434 கோடியில் வெள்ள தடுப்பு பணி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீண்ட கால 12 வெள்ள தடுப்பு பணிகள் ரூ. 434 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம்”

சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட திட்டங்கள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”அடையாறு ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோர பொழுதுபோக்கு பூங்கா”

அடையாறு ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோர பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார், சென்னையில், அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

சென்னையில் கழிவறை : ரூ. 430 கோடி ஒதுக்கீடு

சென்னையில் கழிவறை கட்டவும் மேம்படுத்தவும் ரூ. 430 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட சென்னை வளர்ச்சித்திட்டம் ரூ. 1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்

கோவையில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா

கோவையில் ரூ. 172 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

“கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்”

கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் உயர்தர சிறுவர் பூங்கா அமைக்கப்படும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்
ஈரோட்டில், 80 ஆயிரம் ஹெக்டேரில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். இது தமிழ்நாட்டின் 18வது சரணாலயமாகும்

”மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில்”

மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்

கடல் அரிப்பை தடுக்க, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் .

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக்கடன் வழங்க முடிவு

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

”தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுபப்டுத்தும் மையத்துக்கு நிதி”
தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுபப்டுத்தும் மையத்துக்கு நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.