சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல்பட்ஜெட்டை நிதியமைச்சர் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று  காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தங்களுக்கு பேச அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அனுமதி கோரினார். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில், அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையில், நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்ய சபாநாயகர் அறிவுறுத்தினார். இதனால் கூச்சலுக்கு மத்தியில் நிதியமைச்சர் தியாகராஜன் பட்ஜெட்டை வாசித்தார். இதைத்தொடர்ந்து, பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறி, அதிமுகவினர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களது முன்பு வைக்கப்பட்டுள்ள கணியினில் பட்ஜெட் குறித்த தகவலை பார்த்து வருகின்றனர்.