சென்னை: தமிழகஅரசின் பட்ஜெட்டில்  1000 தடுப்பணைகள், புதிய ரேசன் கடைகள், புதிதாக 6 மீன்பிடித்துறைமுகங்கள் உள்பட ஏராளமான அறிவிப்புகளும் நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டு  இருப்பதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்களின் அமளி செய்த நிலையில், அந்த அமளிகளுக்கு இடையே தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதையடுத்து அதிமுகவினர் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது,

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்; பொது நிலங்கள் மேலாண்மைக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்

கொரோனா கால நிவாரண தொகையாக ரூ.9,370.11 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ரூ.4,807 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

உணவு மானியத்துக்கு ரூ.8,437.57 கோடி நிதி ஒதுக்கீடு புதிய ரேசன் கடைகள் அமைக்கப்படும்

தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும். ரூ.111.24 கோடி செலவில் 200 குளங்களின் தரம் உயர்த்தப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்.

ரூ.610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்

நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி நிதி ஒதுக்கீடு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150கோடி நிதி ஒதுக்கீடு

புதிதாக 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்

மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கீடு

ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்

இந்தியாவில் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்

5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்

ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

இவ்வாறு அவர் பேசினார்.