சென்னை:
யாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

கட்டுக்கட்டான புகார் மனுக்களுடன் திமுக எம்.பி.க்களான தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, தமிழச்சி ஆகியோர்  கடந்த 13-தேதியன்று தமிழக தலைமைச் செயலரை சந்தித்தனர். அதைத் தொடர்ந்து பேட்டியளித்த டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் போன்றோர், ‘தலைமை செயலர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார். இதுகுறித்து பாராளுமன்ற சபாநாயகரிடம் புகார் அளிப்போம் என்று தெரிவித்தனர். அப்போது பேசிய தயாநிதி மாறன்,  நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா, தாழ்த்தப்பட்ட ஆட்களா’, எங்களை மரியாதைக்குறைவாக நடத்துவதற்கு  என கேள்வி எழுப்பினார்.
தாழ்த்தப்பட்ட மக்களைத் தான் மூன்றாம் தர மக்கள் போல நடத்துவார்கள். மற்ற சாதியினரை அப்படி நடத்தமாட்டார்கள் என்பது அமைந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சி சமூக வலைதளங்களில் கொளுத்திப் போட்டது. இது வைரலான நிலையில், பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து தயாநிதி மாறன் மன்னிப்பு கோரினார்.
தயாநிதி மாறனின்  ஆவணப்பேச்சு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  திமுக தலைவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்காத நிலையில், கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் நாசூக்காக கடிந்துகொண்டது.
இந்த நிலையில், தயாநிரி மாறன்  பேச்சு, பட்டியல் சமூக மக்களைக் கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே தயாநிதி மாறன்,டி.ஆர்.பாலு ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.