கோவை

தமிழக சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தலில் ஆழ்த்திய கொரோனா பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது.  அவ்வகையில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பையொட்டி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.   ஆயினும் ஒரு சில இடங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்கி உள்ளது.

கோவை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால்  கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முந்தைய கொரோனா அலைகளால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு அது தமிழக சட்டமன்ற உறுப்பினரை பாதித்துள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.