சென்னை: பிரதமர் மோடி  சென்னை வருகையையொட்டி, டிவிட்டரில் கோபேக் மோடி ஹேஷ்டேக்  டிரெங்கினா நிலையில், அதில்,  நடிகை ஓவியாவும் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட் பதிவிட்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர், ஓவியா மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று  சென்னை வந்தார்.  அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, #Goback Modi ஹேஷ்டேக் டிரெண்டிங்காக்கப்பட்டு வந்தது.  இந்த டிவிட்டுக்கு ஆதரவாக, பிக்பாஸ் சீசன் புகழ் நடிகை ஓவியாவும் டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது டிவீட் சலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இது சமூக வலைதளங்களில் சிலாகிக்கப்பட்டது. ஓவியாவின் ரகிர்கள்,  ‘எங்க தலைவிக்கு தில்ல பார்த்தியா’ என்று டிவீட் செய்திருந்தனர்.

இந்த நிலையில், நடிகை ஓவியா பாஜக சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் சட்டப் பிரிவு, சைபர் கிரைமில் மனு ஒன்றை சமர்ப்பித்தது. அதில், பிரதமரின் சென்னை வருகையை விமர்சித்து, பொதுஅமைதிக்கு களங்கம் விளைவிப்பதாகவும்,  போராட்டங்களை தூண்டுவதுமாக உள்ளது. இது தொடர்பாக அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,  அவரது டிவீட்டின் பின்னணியில் உள்ள  நோக்கம் என்ன என்பதை காவல்துறை சரிபார்க்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய பாஜக மாநில செயலாளர்,  ஓவியாவின் நடவடிக்கை இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் உள்ளதாகவும்,  அதுபோல சில அரசியல் கட்சிகளும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அமைதி மற்றும் ஒழுங்கை சிதைக்க வழிவகுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.