சென்னை
தமிழக அரசு புதிய அறிவிப்புகளுடன் பட்ஜெட்ட்டை தயாரித்து வருகிறது.

தமிழக சட்டசபை கூஉட்டம், 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இம்மாதம் 3-வது வாரம் மீண்டும் கூட உள்ளது. கூட்ட முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் ஆகிறது.
அதன்படி பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்ய உள்ளனர்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு முன்பு கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுவே ஆகும். ஏனெனில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும் தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்றும், அதன் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இலவச அரசு பேருந்து பயண திட்டத்தையும் சற்று விரிவுபடுத்த அரசு யோசித்து வருவதாக தெரிகிறது.
இளஞ்சிவப்பு நிற முகப்பு கொண்ட பஸ்சிலும், ‘மகளிர் விடியல் பயணம்’ பஸ்சிலும் பெண்கள் தற்போது இலவசமாக பயணம் மேற்கொண்டு வருவதை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதைத் தவிர மேலும், பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாக இருப்பதால், அது என்னென்ன? என்பதை எதிர்நோக்கி தமிழக மக்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.