சென்னை

தமிழக அரசு அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி பட சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது.

முன்னணி நடிகர் அஜித்குமார்  துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படும். இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாளை 1,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் டிக்கெட் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்னரே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாகியுள்ளது.

தமிழக அரசு ‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்பு காட்சிக்கு சு, தயாரிப்பு நிறுவனம் வைத்த கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியுள்ளது., நாளை (06-02-2025) ஒருநாள் மட்டும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சி இரவு 2 மணி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டும்) திரையிடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.