சென்னை
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜூன் 21 அன்று கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது எனச் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இது தமிழகத்தின் 16 ஆவது சட்டப்பேரவை ஆகும்.
இந்த சட்டப்பேரவையின் முதற் கூட்டம் கூடுவது குறித்து இன்று தமிழக ஆளுநர் பட்வாரியை முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பு இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
அதையொட்டி தமிழக சபாநாயகர் அப்பாவு வரும் ஜூன் 21 அன்று 16 ஆம் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.
[youtube-feed feed=1]