டில்லி

மிழக பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி வேட்பாளர்கள் பட்டியல் குறித்து இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், ”தே.மு.தி.க, புதிய தமிழகம் கட்சிகள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியதால் பாதிப்பு ஏற்படாது, வேட்பாளர் பட்டியல் குறித்து பா.ஜ.க மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தி உள்ளது, விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே திருநெல்வேலி தொகுதியில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.   கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்னரே அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இனிமேல் தான் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அக்கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே தொகுதி பட்டியல் வெளியாகும் முன்பே பாஜகவில் நடிகைகள் குஷ்பு, கவுதமி ஆகியோர் தொகுதிப்பணிகளை தொடங்கி அந்த தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படாதது குறிப்பிடத்தக்கதாகும்.